மதங்கள் மனதை பக்குவப்படுத்தும் முறைதனை,
சிந்தனை எப்படி வேலை செய்கிறது?சொல்லவில்லை
மனங்களில் சிக்குவதே நோய்களுக்கு காரணம்!
என்ற விழிப்புணர்வை சொல்லித்தர தவறுவது ஏன் ?
இயற்கை நியதிகளை விளக்கவில்லை
பொய்யான பிரித்தாளும் செய்தி மட்டும்!
இறைவன் ஒருவனே!
அவர் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல
எந்த கண்டமும் அல்ல எந்த நாடும் அல்ல
எந்த மொழியும் அல்ல எந்த மதமும் அல்ல
எந்த சாதியையும் அல்ல என்ற உண்மை உணரவும்
அகிலத்தை ஆக்கிய ஒருவன்!
அணைத்து உயிரினங்களிலும் இருக்கிறான்!
எண்ணம், சொல் மற்றும் செயல் பொறுத்ததே கூலி!
உன்னை உணராமல் வேதம் ஓதியும்
கோவில் செல்வதாலும் ஒரு பயணமும் உண்டோ !
தீதும் நன்றும் ஒன்ரே!
நீயம் நானும் ஓனரே
என்ற உண்மை உணர்வோம்!
மனதை கடந்தால் ஞானம் நிச்சயம்
மனதை கடக்க முடியாதவரே சாதி, மதமென்று
வேறுபாட்டின் உச்சம் சென்று
மனத்தின் பிடியில் சிக்கித் தவித்து
மரணப் படுக்கையில் உணர்கிறார்கள் சாதாரண மக்கள்
தன்னை உணரா மக்கள் கூட்டமே எங்கும் உலகில்
உன்னை யாரென்று உணர்ந்த பின்தான்
யாதும் ஊரென்றும் யாவரும் உறவினரென்று புரியும்
உண்மை என்னவென்று உணர்வோம்!
உன்னை உணர்ந்து மனதை கடந்தால்
இறைவன் தரும் அருட்கொடை பல!
ஞானம் நிச்சயம் தந்து,
முக்தி, சமாதி, ஐக்கியம் , ஜீவன் முக்தி தரும்
எல்லாம் வல்ல அந்த இறைவன் ஒருவனே!
அன்புடன்
வை . தமிழ்க்கினியன்